10 லட்சம் ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்பும் பாக்., அரசு
10 லட்சம் ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்பும் பாக்., அரசு
ADDED : ஆக 07, 2025 12:16 AM
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகளை, மீண்டும் அவர்களுடைய நாட்டிற்கு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லை ஒட்டியுள்ள மாகாணங்களான கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான், பஞ்சாப் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு, பாகிஸ்தான் அரசு சார்பில் அடையாள சான்று அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், ஆப்கன் அகதிகளை மீண்டும் அவர்களின் நாட்டுகே அனுப்பும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ல் அகதிகளாக உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை ஆப்கனுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.