மின்சார வாகனம் மீது பயணிகள் பஸ் மோதி விபத்து: நேபாளத்தில் 7 பேர் உயிரிழப்பு
மின்சார வாகனம் மீது பயணிகள் பஸ் மோதி விபத்து: நேபாளத்தில் 7 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 21, 2025 05:49 PM

சித்வான்: நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் இன்று காலை பஸ் ஒன்று மின்சார வாகனத்துடன் மோதியதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து சித்துவான் போலீஸ் அதிகாரி கோவிந்தா புரி, கூறியதாவது:
சித்வான் மாவட்டத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் தங்காதியில் இருந்து காகர்பிட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ், இன்று காலை 10:15 மணியளவில் மின்சார வாகனத்துடன் மோதியது.
இதில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சித்வான் மருத்துவ கல்லுாரிமருத்துவமனை மற்றும் பரத்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது
இவ்வாறு கோவிந்தா புரி கூறினார்.