sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

/

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லியில் பிரதமர் மோடி பெருமிதம்

4


UPDATED : ஜூலை 09, 2025 10:43 PM

ADDED : ஜூலை 09, 2025 10:31 PM

Google News

4

UPDATED : ஜூலை 09, 2025 10:43 PM ADDED : ஜூலை 09, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விந்தோக் : ''ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் சக்தி,'' என நமீபியா பார்லிமென்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

வரவேற்பு5 நாடுகள் பயணத்தில் கடைசியாக பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நமீபியா பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். பார்லிமென்ட்டுக்கு வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு எம்.பி.,க்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.

இந்திய மக்களின் ஆசிதொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகத்தின் கோவிலான இந்த அவையில் பேசுவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த பெருமையை அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் நாட்டின் பிரதிநிதியாக, 140 கோடி இந்திய மக்களின் ஆசிகளை உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.

பகிர்கிறோம்

நமீபியாவில் முதல் பெண் அதிபரை தேர்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பெண் ஜனாதிபதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்து கொள்கிறோம். ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்ததும் அரசியலமைப்பின் சக்தி.

காலத்தை கடந்துஇரு நாட்டு மக்களின் நட்புகளை பிரதிபலிக்கும் வகையில் விளங்கும் நமீபியாவின் உயரிய விருதை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. நமீபியாவின் கடினமான மற்றும் நேர்த்தியான தாவரங்களை போல், நமது நட்பும் காலத்தை கடந்து நிற்கிறது. மேலும். உங்களின் தேசிய தாவரத்தைபோல், காலத்திற்கு ஏற்ப வலுவடைகிறது.இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை ஏற்ற முதல் நாடாக நமீபியா இருப்பது மிகழ்ச்சி. நமது இரு தரப்பு வர்த்தகம் 800 மில்லியன் டாலரை கடந்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தை போல் நாம் தற்போது பயற்சி மேற்கொள்கிறோம். இது விரைவில் அதிகரிக்கும்.

மருந்துகள்

கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆப்ரிக்காவுக்கு மருந்துகளை வழங்கி ஆதரவாக இருந்தோம். இந்தியாவின் ஆரோக்கிய மந்திரி புதுமை ஆதரவு திட்டத்தின் கீழ் ஆப்ரிக்காவுக்கு மருத்துவமனைகள், கருவிகள், மருந்துகள் , பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி உதவினோம். புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை நமீபியாவுக்கு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் 15 நாடுகளில் பயன்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அதிகாரத்தால் அல்ல. ஒத்துழைப்பால் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆதிக்கத்தால் அல்ல, சமத்துவத்தினால் எதிர்காலத்தை உருவாக்குவோம். இதுவே நமது தொலைநோக்குப் பார்வையின் உணர்வாக இருக்கும். நாம் போராடிய சுதந்திரத்தை மட்டுமல்ல, நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பும் எதிர்காலத்தையும் நமது மக்கள் பெறட்டும். இவ்வாறு மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us