sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சவுதி அரேபியாவில் நேற்றில்லாத மாற்றம் : மன்னருக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டு

/

சவுதி அரேபியாவில் நேற்றில்லாத மாற்றம் : மன்னருக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டு

சவுதி அரேபியாவில் நேற்றில்லாத மாற்றம் : மன்னருக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டு

சவுதி அரேபியாவில் நேற்றில்லாத மாற்றம் : மன்னருக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டு


ADDED : செப் 27, 2011 09:55 AM

Google News

ADDED : செப் 27, 2011 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத் : சவுதி அரேபியாவில், நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்கவும், வாக்களிக்கவும், ஷூரா கவுன்சிலில் உறுப்பினர்களாகவும் மன்னர் அப்துல்லா அனுமதி வழங்கியுள்ளார். அவரது அறிவிப்பை, அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவும் மன்னருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.பிற நாடுகளில் உள்ளதைப் போல பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என, சவுதி அரேபியாவில் நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.அந்நாட்டில் பெண்கள், ஆண் துணையின்றி வாழக் கூடாது, கணவர் அல்லது தந்தை அல்லது சகோதரர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, கார் ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. சமீபத்தில் பெண்கள் தனியாக கார் ஓட்டும் உரிமை கோரி போராட்டம் நடத்தினர்.தற்போதைய மன்னர் அப்துல்லா, தன்னை சீர்திருத்தவாதியாகக் காண்பித்துக் கொள்பவர். அதற்கேற்ப சவுதி மக்கள் சமூகத்தில் காலத்திற்கேற்றபடி பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார். அரபு நாடுகளில் புரட்சித் தீ பரவிய வேளையில், சவுதி அரேபியாவிலும் அதன் தாக்கம் தென்பட்டது. அப்போது மன்னர் பல்வேறு சலுகைகளை அறிவித்து அந்தத் தாக்கத்தைக் குறைத்தார்.சவுதியைப் பொறுத்தவரை, மன்னர் ஆட்சிதான் என்பதால், நகராட்சிக்கான பதவிகளுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நான்காண்டுக் காலம் கொண்ட இப்பதவியில், இன்றுவரை ஆண்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 22ம்தேதி அடுத்த நான்காண்டுக்கான நகராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், மன்னருக்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவான 'ஷூரா கவுன்சிலில்' பேசிய மன்னர் அப்துல்லா, 'அடுத்த நகராட்சித் தேர்தல் முதல் பெண்களும் வேட்பாளராக நிற்கலாம், வாக்களிக்கலாம். ஷூரா கவுன்சிலுக்கும் உறுப்பினர்களாக வரலாம். இம்முடிவை நாட்டின் உயரிய மத அறிஞர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே எடுத்துள்ளேன்' என அறிவித்தார்.

சவுதியில் நகராட்சிகளுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் கிடையாது. பாதி உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், மீதி பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஷூரா கவுன்சிலில் இன்று வரை ஆண்களே உறுப்பினர்களாக உள்ளனர். மன்னரின் அறிவிப்பு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.'இந்த அறிவிப்பை உடனே ஏன் அமல்படுத்தக் கூடாது? நாட்டிற்கு உடனடியாக ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடக் கூடாது என்பதற்காக மன்னர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். எனினும், பெண்களுக்கான மிகச் சிறிய உரிமைகளுக்குக் கூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது என்பதே பெரிய வெட்கக் கேடுதான்' என்று தெரிவித்துள்ளார் சவுதியின் பிரபல பெண்ணுரிமைப் போராளி, வகேஜா அல் ஹவைதார்.






      Dinamalar
      Follow us