UPDATED : ஜூலை 24, 2011 06:37 PM
ADDED : ஜூலை 24, 2011 06:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சியோல்: இந்திய ஜனாதிபதி மூன்று நாள் பயணமாக இன்று தென்கொரியா வந்தார்.அவர் தென்கொரியாவுடன் அணுசக்தி ஒருகிணைப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை பலபடுத்த அந்நாட்டு அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தென்கொரியாவுக்கு வந்த பிரதிபா பாட்டீலுக்கு சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பும் சிறப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அவர் இம்மாதம் 26 ஆம் தேதி வரை தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை முடித்து விட்டு அவர், ஒரு வார பயணமாக மங்கோலியா செல்கிறார். அங்கும் அணுசக்தி ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவார்.