sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

8 போரை தீர்த்துட்டேன்: 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: அள்ளிவிடுகிறார் டிரம்ப்

/

8 போரை தீர்த்துட்டேன்: 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: அள்ளிவிடுகிறார் டிரம்ப்

8 போரை தீர்த்துட்டேன்: 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: அள்ளிவிடுகிறார் டிரம்ப்

8 போரை தீர்த்துட்டேன்: 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: அள்ளிவிடுகிறார் டிரம்ப்

2


UPDATED : அக் 18, 2025 11:34 AM

ADDED : அக் 18, 2025 07:10 AM

Google News

2

UPDATED : அக் 18, 2025 11:34 AM ADDED : அக் 18, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''எட்டு உலகளாவிய போர்களை தீர்த்து வைத்துள்ளேன். தற்போது 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்து டிரம்பிடம், ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தினார். அவர் டிரம்பிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட, டோமாஹாக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அதிபர் டிரம்ப் கூறியதாவது:

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது. உக்ரைனுக்கு அமெ ரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பது அமெரிக்காவின் பாதுகாப்பு திறன்களை பாதிக்க கூடும். உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க முடியாது. அவை அமெரிக்காவுக்கு தேவை. கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைனுக்கு நாங்கள் அனுப்பி வரும் பல ஆயுதங்கள் எங்களுக்கு தேவையானது. அமெரிக்கா உக்ரைனுக்கு நிறைய கொடுத்துள்ளது. உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகள் தேவையில்லை என்று விரும்புகிறேன்.

ஏவுகணைகள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது. ஆனால் நமது நாடுகளுக்கு இடை யிலான உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்ய அதிபர் புடின் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன்.

தற்போது 9வது ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும். ருவாண்டா மற்றும் காங்கோவுக்குச் சென்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுங்கள். நாங்கள் தீர்த்து வைத்த அனைத்துப் போர்களையும் பாருங்கள். எனக்குத் தெரிந்தவரை, ஒரு போரை கூட தீர்த்த ஒரு அதிபரையும் நாம் ஒருபோதும் கண்டதில்லை.

ஒரு போரையும் கூட தீர்க்கவில்லை. ஆனால் நான் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினேன். நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, ​​அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் சொன்னார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.

யாரோ ஒருவர் அதைப் பெற்றார். மிகவும் நல்ல பெண். ஆனால் எனக்கு அது கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். தற்போதைய ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி கிடைக்கும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் உள்ளன. ஆனால் எங்களுக்கு ஏவுகணைகள் தான் தேவை.டோமாஹாக் ஏவுகணைகள் உக்ரைன் படைகள் ரஷ்ய எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்த உதவும். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான டிரம்பின் அழைப்புகளை புடினை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும், என்றார்.






      Dinamalar
      Follow us