அமெரிக்காவில் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
ADDED : பிப் 13, 2025 07:11 AM

வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு சென்று இருந்தார். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டை, பிரான்சுடன் இணைந்து இந்தியா நடத்தியது. இதில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். அடுத்தாண்டு இந்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரான்சில் உள்ள மார்ஷலேவுக்கு, பிரான்ஸ் அதிபரின் விமானத்தில், மேக்ரோனுடன், பிரதமர் மோடி பயணம் செய்தார். தன் பயணத்தை முடித்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, விமான நிலையம் வரை சென்று, மேக்ரோன் வழியனுப்பி வைத்தார். அவர் வாஷிங்டன் சென்று அடைந்தார்.
அங்கு, அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவாரத்தை நடத்த உள்ளார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து சிறப்பாக செயல்படுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

