தமிழ் மக்களுக்கான திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி
தமிழ் மக்களுக்கான திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி
UPDATED : ஏப் 05, 2025 09:03 PM
ADDED : ஏப் 05, 2025 05:26 PM

கொழும்பு: கொழும்பு: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவை தமிழ் மக்கள் பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு நடைபெற்றது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசு ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
பங்களிப்பு
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள தமிழ் அமைப்பு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ' இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்களை சந்திப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு அப்போது இரங்கல் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கவுரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடன் கூடிய வாழ்க்கைக்கான எனது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது பயணத்தின்போது துவக்கி வைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் கைது
பிறகு, பிரதமர் மோடியை இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக பாராட்டுகள் தெரிவித்தேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.