UPDATED : அக் 23, 2024 02:58 AM
ADDED : அக் 23, 2024 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் இன்று சீன அதிபர் ஷீ ஜின் பிங்கை சந்தித்து பேசுகிறார்.
எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரஷ்யாவில் நேற்று துவங்கிய பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபரை இன்று சந்திக்கிறார். இந்நிலையில் இருவரும் இதுவரை 2020க்கு முன், 18 முறை சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று நடைபெறும் சந்திப்பின் போது இரு நாடுகளிடையே துாதரக உறவுகள் ,ராணுவம் மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம்.