sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

/

கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

2


UPDATED : ஏப் 05, 2025 08:52 PM

ADDED : ஏப் 05, 2025 08:49 PM

Google News

UPDATED : ஏப் 05, 2025 08:52 PM ADDED : ஏப் 05, 2025 08:49 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை சென்ற பிரதமர் மோடி, கொழும்புவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Image 1401863கடந்த 1987 முதல் 1990 வரையில் இலங்கையில் அமைதி காக்கும் பணிக்காக இந்திய ராணுவத்தின் அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு வந்தது. அப்போது, விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவாக, இலங்கை பார்லிமென்ட் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.Image 1401864இந்நிலையில், இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Image 1401865இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஒருமைப்பாடு, அமைதி மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூர்கிறோம்.

Image 1401867அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கிரிக்கெட் மூலமான பிணைப்பு!

Image 1401868

தொடர்ந்து, 1996ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இலங்கை அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.Image 1401869இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்! இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.Image 1401870






      Dinamalar
      Follow us