sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

/

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்

8


UPDATED : செப் 05, 2024 11:39 PM

ADDED : செப் 05, 2024 11:35 PM

Google News

UPDATED : செப் 05, 2024 11:39 PM ADDED : செப் 05, 2024 11:35 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைனும் அதற்கு ஒத்துழைத்தால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்யாவும் தயங்காது' என, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா- - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் மேலை நாடுகள் ஆயுதங்களும், நிதியும் அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அவை பொருளாதார தடைகளையும் விதித்துஉள்ளன.

மலிவு விலை


ரஷ்யாவுடன் நல்லுறவு பாதிக்காத வகையில், இந்தியா இந்தப் பிரச்னையில் விலகி நின்றது. அமெரிக்காவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

இது, அப்பட்டமான ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு என்று மேலைநாடுகள் விமர்சனம் செய்வதை, மோடி அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அதிபர் புடினை சந்தித்து பேசினார்; உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தினார்.

எந்த பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்றும் சுட்டிக் காட்டினார். இது, புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், மேலைநாடுகளை முழுவதுமாக பகைத்துக் கொண்ட நிலையில், இந்தியாவின் நட்பை இழக்க அவர் தயாராக இல்லை.

கச்சா எண்ணெயால் கிடைத்து வரும் வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை.

இதையடுத்து, கடந்த மாதம் உக்ரைன் சென்றார் பிரதமர் மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்; நேரத்தை வீணடிக்காமல் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தும்படி வலியுறுத்தினார்.

அதற்கு தேவையான உதவிகளை செய்ய, இந்தியா தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

ஜெலன்ஸ்கி முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தார். இந்தியா மட்டும் நடுநிலையை கைவிட்டு, ரஷ்யாவுடன் தன் உறவை திருத்திக் கொண்டால் போர் உடனே முடிந்து விடும் என, மோடி முன்னிலையிலேயே இந்திய செய்தியாளர்களிடம் சொன்னார்.

மோடி அதற்கு பதிலடி கொடுத்தார். போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; போரே வேண்டாம் என்று அமைதியின் பக்கம் நிற்கிறது என்றார்.

புடினை மோடி அரவணைத்ததை விமர்சித்த மேலைநாடுகள், ஜெலன்ஸ்கியையும் அதே பாணியில் மோடி கட்டிப்பிடித்ததை விமர்சிக்க வார்த்தை கிடைக்காமல் திகைத்தன. உக்ரைனை வீழ்த்தி, துரிதமாக போரை முடித்து விடலாம் என்று நம்பிய ரஷ்யாவுக்கு அப்படி நடக்காததால் ஏமாற்றம்.

அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் பின்னால் நிறுத்திக் கொண்டு வாய்வீச்சு காட்டினால் ரஷ்யா பின்வாங்கி விடும் என, எதிர்பார்த்த உக்ரைனுக்கு அப்படி நடக்காததால் ஏமாற்றம்.

இன்னும் எத்தனை காலம் தான் வெளிநாடுகளின் போர்களில் மூக்கை நுழைத்து பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுப்பது என அமெரிக்காவிலும் அதிருப்தி பரவுகிறது.

இப்படி எல்லா தரப்புக்கும் இக்கட்டான நேரத்தில், மோடியின் முன்முயற்சி புதிய கதவுகளை திறந்துள்ளது.

மதிக்கிறேன்


ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. அதில் பேசிய புடின், ''உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நட்பு நாடுகள் முயற்சி செய்கின்றன. நண்பர்களின் முயற்சிகளை மதிக்கிறேன்.

''போர் நிறுத்த பேச்சை தொடர உக்ரைன் ஆர்வமாக இருந்தால், அதில் எனக்கும் சம்மதமே,'' என்றார்.

இது குறித்து ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டுமின்றி அமெரிக்காவுடனும் சுலபமாக பேசக்கூடியவர் இந்திய பிரதமர் மோடி.

இருதரப்பின் எண்ணங்களையும் நேரடியாக கேட்டறிந்து, அமைதிப் பேச்சை வழிநடத்தவும் மோடியால் முடியும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கும், பிரேசிலுக்கும் இரு தரப்புடனும் விவாதிக்க வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதால், புடின் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இந்தியா மட்டுமே நிற்கிறது.






      Dinamalar
      Follow us