ADDED : ஆக 30, 2024 01:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டனில் இந்தியர்கள் குறித்து இன ரீதியிலான துவேஷ கருத்து மற்றும் வீடியோவை பதிவு செய்த எக்ஸ் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இங்குள்ள பிரபல நடிகர் பாரி ஸ்டாண்டன் என்ற பெயரில் போலியான கணக்கு எக்ஸ் வலைதளத்தில் பதியப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு இனவெறி தாக்குதல் நடப்பதாக பல பதிவுகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக இந்தியர்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இந்திய தூதரகம் சார்பில் எக்ஸ் வதள தள நிர்வாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கணக்கு முடக்கப்பட்டது.