'பாகிஸ்தான் உடனான உறவு இந்தியாவிற்கு எதிரானது அல்ல'
'பாகிஸ்தான் உடனான உறவு இந்தியாவிற்கு எதிரானது அல்ல'
ADDED : ஆக 22, 2025 12:35 AM

இஸ்லாமாபாத்:'பாகிஸ்தான் உடனான சீனாவின் உறவு மூன்றாவது நாட்டுக்கு எதிரானது கிடையாது' என இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறினார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இரு நாள் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தான்- - சீன வெளியுறவு அமைச்சர்களின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கு அவர் இணை தலைமை வகிக்கிறார். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீரை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீனா - பாகிஸ்தான் உறவு எந்த மூன்றாம் நாடுகளையும் குறிவைத்து உருவானது இல்லை. தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள்,” என்றார்.