sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்

/

ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்

ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்

ஒரு காலை இழந்த ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி? கோமாவில் இருப்பதாக தகவல்

13


UPDATED : மார் 13, 2026 12:03 PM

ADDED : மார் 13, 2026 08:27 AM

Google News

13

UPDATED : மார் 13, 2026 12:03 PM ADDED : மார் 13, 2026 08:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இரு வாரங்களை எட்டியுள்ள இந்தப் போரில், ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி,56, பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தனது தந்தையைக் கொன்ற அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி காயமடைந்து கோமாவில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழான 'தி சன்' பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் கூறியிருப்பதாவது; தாக்குதலில் புதிய தலைவர் மொஜ்தபா ஒரு காலை இழந்துள்ளார். மேலும், அவரது வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரானின் சுகாதார அமைச்சரும், அனுபவம் வாய்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான முகமது ரேசா ஜபர்காந்தி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார், இவ்வாறு அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஈரானின் ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மொஜ்தபாவின் முதல் அறிக்கையை ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அந்த அறிக்கையை தலைவர் வாசிக்காமல், ஒரு செய்தி வாசிப்பாளர் மூலமே வாசிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு காரணமாக, இந்தத் தகவலை உறுதிபடுத்த முடியவில்லை என்றும் 'தி சன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

டிரம்ப் சொல்வது என்ன?@

@ ஈரான் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: மொஜ்தபா கமேனி காயம் அடைந்துள்ளார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இது உங்களுக்கு தெரியும், என்றார்.








      Dinamalar
      Follow us