ராஜினாமா செய்தவர் 4 நாளில் மீண்டும் பிரதமராக அறிவிப்பு பிரான்சில் அரசியல் கூத்து
ராஜினாமா செய்தவர் 4 நாளில் மீண்டும் பிரதமராக அறிவிப்பு பிரான்சில் அரசியல் கூத்து
ADDED : அக் 11, 2025 11:24 PM

பாரிஸ்:பிரான்ஸ் அரசியலில் திருப்பமாக பதவி விலகிய நான்கே நாட்களில் செபாஸ்டியன் லெகோர்னுவை, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் 47வது பிரதமராக, ராணுவ அமைச்சராக இருந்த செபாஸ்டியன் லெகோர்னு, கடந்த செப்., 9ல் பதவியேற்றார்.
ராஜினாமா கடந்த 7ம் தேதி புதிய அமைச்சரவையை நியமித்த சில மணி நேரத்திலேயே அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் எதிர்க் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் சிக்கன பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு, பிளவுபட்ட பார்லிமென்டின் ஒப்புதலை பெறும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டதால் அவர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பலகட்ட பேச்சுக்கு பின், செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்துள்ளார்.
முடிவு நாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அதிபர் மேக்ரான், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
'இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பட்ஜெட்டை வழங்கவும், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்கவும் முடிந்த அனைத்தையும் செய்ய அதிபர், என்னிடம் ஒப் படைத்த பணியை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என, செபாஸ்டியன் லெகோர்னு சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.