UPDATED : ஜூலை 22, 2011 08:28 AM
ADDED : ஜூலை 21, 2011 07:07 AM

பிளான்டையர்: மலாவி நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்தனர். ஆப்ரிக்க நாடான மலாவி நாட்டின் அதிபராக பிங்கூ-வா-முத்தாரிகா உள்ளார். இவர் மக்களுரிமை சட்டத்தினை மீறி பொருளாதரா சீர்திருத்தம் மேற்கொண்டதாக புகார் எழுந்தது . இவரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று வர்த்தக நகரான தலைநகர் லைனோகிவ் நகரில் ஒன்று கூடி அதிபர் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். பொதுமக்களி்ன் இந்த கிளர்ச்சியினால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதற்கிடையே மலாவி நாட்டின் வடக்குபகுதியான மிஸூசூ நகரில் உள்ள அதிபரின் ஜனநாயக முற்போக்கு கட்சியின் அலுவலகத்தினை பொதுமக்கள் சூறையாடினர். அங்கும் பதட்டம் நிலவி வருகிறது. இது குறித்து மலாவி நாட்டின் சட்ட பணிகள் மற்றும் மக்களுரிமை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அதிபருக்கு எதிராக புரட்சி வெடிக்க துவங்கியுள்ளது என்றார்.