நியூயார்க்கில் சாலை விபத்து; இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
நியூயார்க்கில் சாலை விபத்து; இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
UPDATED : மே 13, 2025 08:06 AM
ADDED : மே 13, 2025 07:45 AM

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் இருவர் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் மானவ் படேல் மற்றும் சவுரவ் பிரபாகர் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.