ADDED : ஜூலை 11, 2011 07:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா : வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு அருகே மிரேசாரை நகரில் உள்ள பள்ளத்தில், டிரக் ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பலியாயினர்.
மேலும் 30 பேரை காணவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 9 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட துவக்கப்பள்ளி மாணவர்கள், கால்பந்து போட்டியை காண்பதற்காக டிரக்கில் சென்றுள்ளனர். மிரேசாரை அருகே வரும் போது, டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தததாகவும், இதனையடுத்து அருகில் இருந்த பள்ளததில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 27 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.