உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்; 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்; 13 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜன 09, 2025 08:45 AM
ADDED : ஜன 09, 2025 07:23 AM

கிவ்: உக்ரைனில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஸபோரிஷியா. இந்த நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில், 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தாக்குதலில் ரத்த காயங்களுடன் மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா இதுக்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.