ADDED : அக் 16, 2025 10:44 PM

வாஷிங்டன்: ரஷ்ய-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினும் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சு நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு இன்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடைபெறுகிறது.
ஏற்கனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்புடன் பேசியபோது டோமாஹாக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய, உக்ரைன் போர் தொடர்ந்தால், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நீண்ட துாரம் சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகள் வழங்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
நான் இப்போது ரஷ்ய அதிபர் புடினுடன் பேசி வருகிறேன். தற்போது உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது, மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவில் அதிபர் புடினும் என்ன பேசினேன் என்பது குறித்து அறிவிப்பேன்.
இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.