உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் 14 வயது குழந்தை உட்பட 10 பேர் பலி
உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் 14 வயது குழந்தை உட்பட 10 பேர் பலி
UPDATED : ஆக 28, 2025 01:25 PM
ADDED : ஆக 28, 2025 10:28 AM

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அவர் ரஷ்ய அதிபர் புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் உக்ரைன் அதிபர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ''உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை'' என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
இதனால் போர் தொடரும். முடிவுக்கு வராது என்பது தெளிவானது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர்.
இறந்த 4 பேரில் 14வயது குழந்தையும் அடங்கும். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ட்ரோன் தாக்குதலில் இடிந்து தரைமட்டமானது. மேலும் சில இடங்களில் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.