ADDED : ஆக 31, 2024 04:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்யாவில் 19 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் பயணித்த ஹெலிகாப்டர் மாயமானது. அதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வச்கஜட்ஸ் வோல்கானா என்ற இடத்தில் இருந்து கிளம்பிய எம் - 8 டி ரக ஹெலிகாப்டர், மாஸ்கோ நேரப்படி காலை 7:15 மணிக்கு சென்றடைய வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இதனையடுத்து மாயமான அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
1960 ல் வடிவமைக்கப்பட்ட இரண்டு இன்ஜீன் கொண்ட இந்த ஹெலிகாப்டர், ரஷ்யா மற்றும் அதன் அண்டை நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.