ADDED : ஏப் 20, 2025 01:32 AM
மாஸ்கோ: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இன்று மாலை வரை, 24 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அவர் பேச்சு நடத்தினார்.
ஆனால், இதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைனில், 35 பேர் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை, 24 மணி நேர போர் நிறுத்தம் செய்யப்படுவதாக, புடின் அறிவித்துள்ளார்.
இதை ஏற்காமல் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்துக்கு புடின் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

