ADDED : மே 26, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசு முறைப்பயணமாக வடகொரியா செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர்புடின் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் விரைவில் வடகொரியா செல்ல உள்ளார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் கூறியது, அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறைப்பயணமாக விரைவில் வட கொரியா செல்கிறார். எப்போது, எந்த தேதி என முடிவு செய்யப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் மாளிகை செய்து வருகிறது என்றார்.