sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்க அதிபர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

/

ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்க அதிபர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்க அதிபர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள் சந்திப்பு: அமெரிக்க அதிபர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு


ADDED : ஆக 20, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க வைக்க முயற்சி எடுப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022 பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.

அழைப்பு இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில், கடந்த 15ல் நடந்தது. இதில் போர் நிறுத்தம், பொருளாதார தடை தளர்வு உட்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

ஆனால், அந்த சந்திப்பில் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப் படவில்லை. இந்த சந்திப்பு முடிந்தவுடன் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரித்தார். அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அவருடன் சில ஐரோப்பிய நாடுகளின் த லைவர்களும் சென்றனர் .

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் சென்றனர்.

ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மார்க் ருட்டே ஆகியோரும் உடன் சென்றனர்.

பல நாடுகளின் தலைவர்கள் வெள்ளை மாளிகையில் கூடியதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை பதிவு செய்ய சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வெள்ளை மாளிகை முன் திரண்டிருந்தன.

கவனம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 'ஒரு உண்மையான போர் நிறுத்தத்திற்கும், புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உக்ரைன் தயாராக உள்ளது.

'ரஷ்யாவை விட உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் தகுதியானது' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். மேலும், ரஷ்யாவுடனும் டிரம்ப் நெருக்கம் காட்டுவதால், அந்நாட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது கவனமுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு 40 நிமிடங்கள் பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் சிறப்பான சந்திப்பு நடந்தது.

அதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவது குறித்து விவாதித்தோம். இந்த உத்தரவாதத்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் நிறைவேற்றும்.

இந்த சந்திப்பு முடிந்ததும், அதிபர் புடினை அழைத்து அவருக்கும், அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையில் சந்திப்பை ஏற்படுத்தும் பணிகளை துவக்கினேன். எந்த இடம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

முத்தரப்பு கூட்டம் அவர்கள் இருவரும் சந்தித்து பேசிய பின், நானும் அவர்களுடன் பங்கேற்கும் ஒரு முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்திப்புக்கான பணிகளை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் ஒருங்கிணைக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளை நெருங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறப்பான துவக்கம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.12.50 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது, உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும்படி அதிபர் ஜெலன்ஸ்கி கோரியிருந்தார். அதன்படி ஐரோப்பாவிடம் இருந்து 12.50 லட்சம் கோடி ரூபாய் நிதி பெற்று, அதை பயன்படுத்தி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள், ட்ரோன்களை வாங்கும் திட்டத்தை உக்ரைன் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.



புடின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு எப்போது?


இது குறித்து ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பின் இடைவேளையின் போது, அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேசினார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ரஷ்ய அதிபர் புடின் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே ஒரு சந்திப்பு நடக்கும்,” என்றார்.



தேர்தலுக்கு தயார்


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்புடனான வெள்ளை மாளிகை சந்திப்பில், தேர்தல் தொடர்பாக கூறியதாவது: உக்ரைனில் அமைதி மீண்டும் நிலைநாட்டப்பட்டவுடன், தேர்தல் நடத்த நாங்கள் தயார். போர் காலத்தில் தேர்தல்களை நடத்த முடியாது. பார்லிமென்ட்டில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும். வெளிப்படையான மற்றும் சட்டபூர்வமான தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us