sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் விருப்பம்

/

மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் விருப்பம்

மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் விருப்பம்

மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் விருப்பம்


ADDED : ஜூலை 28, 2011 06:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ரஷ்யா அதிபர் பதவிக்கு விளாடிமிர்புடின் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா அதிபராக கடந்த 2000- 2008-ம் ஆண்டு வரை அதிபராக இரு முறை பதவிவகித்தார் விளாடிமிர்புடின் (56). தற்போது ரஷ்யாவின் பிரதமராக உள்ளார். ரஷ்யாவின் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக விளாடிமிர்புடின் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தனது நம்பிக்கைக்குரிய டிமெட்ரிமித்வதேவை அதிபராக பதவியில் அமர்த்தினார். ரஷ்யா அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். அந்த ‌வகையில் ஏற்கனவே 2000-2004, 2004-2008 ஆகிய இரு முறை அதிபராக பதவி வகித்தார். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் ,டிமெட்ரிமித்வதேவை அதிபர் வேட்பாளராக நிறுத்தி அவரையே அதிபராக்கினார். இந்நிலையில் ரஷ்யா அதிபர் தேர்தல் 2012-ம் ஆண்டு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக விளாடிமிர்புடின் போட்டியிடவுள்ளதாக அவரது அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய அரசியல் சீர்திருத்தத்தின்படி அதிபரின் பதவிகாலம் தற்போது ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதால், எனவே அடுத்த ஆண்டு (2012)நடக்கவுள்ள தேர்தலில் புடின் வென்றால் 2018-ம் ஆண்டுவரை அதிபராக பதவியிலிருப்பார் என மாஸ்கோவின் கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us