ADDED : நவ 14, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: குருநானக் ஜெயந்தியையொட்டி, பாகிஸ்தானுக்கு சென்ற 2,000க்கும் மேற்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த சீக்கியர்கள், நேற்று நாடு திரும்பினர்.
சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின், 556வது பிறந்த நாளையொட்டி, நம் அண்டை நாடான பாகிஸ்தானில், அவர் பிறந்த இடமான நன்கானா சாஹிப்புக்கு, நம் நாட்டைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சென்றனர். பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லை வழியாக, 10 நாட்கள் பயணமாக சென்ற அவர்கள், பல்வேறு குருத்வாராக்களில் வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் நேற்று, பாகிஸ்தானில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த சீக்கியர்கள், வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாக்., இடையேயான முதல் மக்கள் தொடர்பை, இந்த யாத்திரை குறிக்கிறது.

