தரையிறங்கிய சிறிய விமானம்; நின்ற விமானத்தில் மோதியது
தரையிறங்கிய சிறிய விமானம்; நின்ற விமானத்தில் மோதியது
ADDED : ஆக 13, 2025 07:02 AM

மோன்டோனா: அமெரிக்காவின் மோன்டோனா மாகாணத்தில் சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது கட்டுபாட்டை இழந்ததில், ஓடுதளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
அமெரிக்காவின் மோன்டோனா மாகாணம் காலிஸ்பிலில் சிறிய விமான நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன் தினம் பைலட் மற்றும் மூன்று பேர் பயணித்த சிறிய விமானம் தரையிறங்க வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் மோதியது. இதனால் விமானத்தில் தீ பிடித்தது. விமானத்தில் இருந்த நால்வரும் உடனே வெளியேறிவிட்டனர்.
பின் விமானம் ஓடுதளத்தில் தீப்பற்றிய நிலையில் சறுக்கிய படியே சென்று, அங்கே நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் மோதி வெடித்தது. இதில் கரும்புகை வான் உயரத்திற்கு எழும்பியது.
தக வல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். விமானத்தில் இருந்து குதித்த நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஓடுதளம் சேதமடைந்ததால் விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.