நார்வே பட்டத்து இளவரசி மகன் மீது பலாத்காரம் உட்பட 32 குற்றச்சாட்டு
நார்வே பட்டத்து இளவரசி மகன் மீது பலாத்காரம் உட்பட 32 குற்றச்சாட்டு
ADDED : ஆக 20, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓஸ்லோ:நார்வேயின் பட்டத்து இளவரசியின் மகன் மீது, நான்கு பாலியல் வன்கொடுமைகள் உட்பட 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுஉள்ளன.
ஐரோப்பிய நாடான நார்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே மாரிட். இவர் பட்டத்து இளவரசர் ஹாகோனை மணப்பதற்கு முன், முதல் கணவர் மூலம் பிறந்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி, 28. இவர், தன் முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்துக்காக, கடந்தாண்டு ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் காதலி மற்றும் அவரது வீட்டை தாக்கியது, நான்கு பேரை பலா த்காரம் செய்தது உட்பட 32 குற்றச்சாட்டு கள் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.