ADDED : ஆக 26, 2011 12:26 AM

வாஷிங்டன் : உலகின் பிரபலமான, 100 பெண்கள் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, ஏழாவது இடத்தை பிடித்துள்ளதாக, 'போர்ப்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
உலகின் பிரபலமான பெண்கள் குறித்த பட்டியலை, பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. இதில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், முதலிடத்தையும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இரண்டாவது இடத்தையும், பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், மூன்றாவது இடத்தையும், பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயி, நான்காவது இடத்தையும், பில்கேட்சின் மனைவி மெலின்டா, ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, ஏழாவது இடத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை அதிகாரி சந்திரகொச்சார், 43வது இடத்தையும், பயோகான் நிறுவன அதிபர் கிரண் மஜும்தார், 99வது இடத்தையும் பிடித்துள்ளனர்.