தென்கொரியா: ஏ.ஐ., பயன்படுத்தி விளம்பரம்; குறிப்பிடுவது இனி கட்டாயம்
தென்கொரியா: ஏ.ஐ., பயன்படுத்தி விளம்பரம்; குறிப்பிடுவது இனி கட்டாயம்
ADDED : டிச 11, 2025 05:44 AM

சியோல்: தென் கொரியாவில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் விளம்பரங்களை 'ஏ.ஐ., -உருவாக்கம்' என கட்டாயம் குறிப்பிட புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்தளவுக்கு பயன் அளிக்கிறதோ அந்த அளவுக்கு, அதைப் பயன்படுத்தி மோசடிகளும் நடக்கின்றன. பிரபலங்களின் படங்களை திருத்தி ஆபாசமாக காட்டுவது உட்பட பல மோசடிகள் நடக்கின்றன.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், கடந்தாண்டில் 96,700 விளம்பரங்களும், நடப்பாண்டில் செப்டம்பர் வரை 68,950 விளம்பரங்களும் போலி என்று கண்டறியப்பட்டன.
இதையடுத்து புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், இனி அதை விளம்பரத்தில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. இதை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.

