இலங்கையில் அமைச்சர்களுக்கான சலுகைகள் அதிரடியாக குறைப்பு
இலங்கையில் அமைச்சர்களுக்கான சலுகைகள் அதிரடியாக குறைப்பு
ADDED : ஜன 25, 2025 11:23 PM

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்கு, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சே, அதிபர், பிரதமர் போன்ற பதவிகளை ஏற்கனவே வகித்து வந்தார்.
கொழும்பு அரசு இல்லத்தில் அவர் வசித்து வரும் நிலையில், அதை காலி செய்யும்படியும், இல்லையெனில் வாடகை செலுத்தும்படியும், அவருக்கு இலங்கை அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் இரு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும். கேபினட் அமைச்சருக்கான ஊழியர்கள் 15 ஆகவும், துணை அமைச்சருக்கான ஊழியர்கள் 12 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
தனி செயலர், ஊடக செயலர் அல்லது மக்கள் தொடர்பு செயலர் போன்ற பதவிகளில், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களை நியமிக்கக் கூடாது.
அரசின் செலவுகளை குறைப்பதே இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.