ADDED : நவ 13, 2012 01:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி அமெரிக்க பெண்ணான சுனிதா வில்லியம்ஸ், இந்திய மக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை விண்வெளியில் இருந்தவேறே தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'இந்தியா மற்றும் உலகிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி ஒரு மிகச்சிறந்த பண்டிகை. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்தவாறே இந்த பண்டிகையில் நானும் பங்கேற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.