கடற்படை கிடங்கில் வெடிவிபத்து : சைப்ரசில் 12 பேர் பலி
கடற்படை கிடங்கில் வெடிவிபத்து : சைப்ரசில் 12 பேர் பலி
ADDED : ஜூலை 11, 2011 11:49 PM
ஜைக்கி : சைப்ரஸ் நாட்டின் தென்பகுதியில், கடற்படைக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில், 12 பேர் பலியாகினர்.
இந்த வெடிமருந்து கிடங்கில், துப்பாக்கி தோட்டாவிற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்து அடைக்கப்பட்ட, 98 டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் இரண்டு தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தான், 12 பேர் பலியாகினர்.
பாக்.,கில் வெடிவிபத்து: இதேபோல், பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ கிடங்கில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் பலியானார். ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், காயமடைந்தவர்களை அருகில் இருந்த ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.