தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ டி20 மகளிர் உலகக்கோப்பை பைனல்; ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன் இலக்கு

டி20 மகளிர் உலகக்கோப்பை பைனல்; ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன் இலக்கு

டி20 மகளிர் உலகக்கோப்பை பைனல்; ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன் இலக்கு


ADDED : ஜூலை 05, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 09:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லார்ட்ஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் குவித்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. ஜோன்ஸ் (6), ஹாட்ஜ் (8) ஆகியோர் வந்த வேகத்தி்் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு, கேப்டன் ப்ரண்டுடன், கேப்சி இணைந்து ஓரளவுக்கு ரன் குவித்தனர். கேப்சி (23) நீண்ட நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த நைட்டும் (2) ஏமாற்றம் அளித்தார்.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரண்ட் மற்றும் இளம் வீராங்கனை கெம்ப் அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய ப்ரண்ட் அரைசதம் விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்துள்ளது. ப்ரண்ட் 58 ரன்னுடனும், கெம்ப் 44 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us