sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சர்ச்சை பேச்சால் பெண் எழுத்தாளர் ‌தஸ்லீமாவுக்கு எதிர்ப்பு

/

சர்ச்சை பேச்சால் பெண் எழுத்தாளர் ‌தஸ்லீமாவுக்கு எதிர்ப்பு

சர்ச்சை பேச்சால் பெண் எழுத்தாளர் ‌தஸ்லீமாவுக்கு எதிர்ப்பு

சர்ச்சை பேச்சால் பெண் எழுத்தாளர் ‌தஸ்லீமாவுக்கு எதிர்ப்பு


UPDATED : ஆக 23, 2011 08:59 AM

ADDED : ஆக 23, 2011 03:44 AM

Google News

UPDATED : ஆக 23, 2011 08:59 AM ADDED : ஆக 23, 2011 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின், நேபாளத்தில் நடக்கவுள்ள இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார்.

சர்ச்சைக்குரிய வங்கதேச நாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸீரின் (49). இவரது சர்ச்சைக்குரிய எழுத்தினால் அவரதுசொந்த நாட்டிலிருந்து கடந்த 1994-ம் ஆண்டு வெளியேற்றப்படடார். தற்போது இந்தியாவில் வசிக்கிறார். இந்நிலையில் நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் முதன்முறையாக நான்கு நாட்கள் இலக்கிய மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தனது டீவீட்டர் சமூக வளையத்தில் மைக்ரோ பிளாக் மூலம் உலக வரைப்பட பற்றிய விவரம் தெரியாமல், இந்தியாவின் ஒரு பகுதிதான் நேபாளம் என கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நேபாள நாட்டினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இலக்கிய மாநாட்டில் தஸ்லீமா கலந்துகொள்ள வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவோம், என ஆவேசத்துடன் கூறினர். இது குறித்து நேபாள் நாட்டு இலக்கிய மாநாட்டு அமைப்பாளர்கள் , தஸ்லீமாவை நேபாளம்வர வேண்டாம் எனவும், அது உங்களின்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என யோசனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தஸ்லீமா தனது நேபாள பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நேபாளம் செல்வதற்காக டில்லி சர்வதேச விமானநிலையம் வந்த போது, நான் எனது சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட்டை கொண்டு வர மறந்துவிட்டதால், நேபாளம் செல்லும் விமானத்தை தவறவிட்டேன என விளக்கம் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us