தாய்லாந்து 43 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' அரசு ஊழியர் விடுதலை
தாய்லாந்து 43 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 'மாஜி' அரசு ஊழியர் விடுதலை
ADDED : ஆக 28, 2025 12:15 AM
பாங்காக்::தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், அரசு முன்னாள் ஊழியர் அஞ்சன் பிரீலெர்ட், 69, என்பவர், 2021 ஜனவரியில், அரச குடும்பத்தை விமர்சித்து, சமூக வலைதளங்களான 'பேஸ்புக், யு டியூப்'பில் ஆடியோ பதிவிட்டார். இது வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாய்லாந்து சட்டப்படி, அரச குடும்பத்தை விமர்சிப்பது குற்றம். இதற்கு 1 - 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஞ்சன் பிரீலெர்ட்டுக்கு, 87 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மன்னிப்பு கோரியதை அடுத்து, இது 43 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் பிறந்த நாளையொட்டி, ஆறு பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர்களில், அஞ்சன் பிரீலெர்ட்டும் ஒருவர். இந்த தகவலை மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் தெரிவித்தார்.