அலுவலகத்தை விட்டு சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து பிரதமர்
அலுவலகத்தை விட்டு சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து பிரதமர்
UPDATED : ஜூலை 06, 2024 11:03 PM
ADDED : ஜூலை 06, 2024 10:53 PM

ஆம்ஸ்டர்டாம்: நேட்டோ'' செகரட்டரி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே 14 ஆண்டுகள் வகித்த பிரதமர் பதவி ராஜினாமா செய்த நிலையில் இன்று தன் அலுவலகத்தைவிட்டு சைக்கிளில் வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு இன்று அதிகாரிகள் பிரியாவிடை கொடுத்தனர். இதில் பங்கேற்ற மார்க் ரூட்டே நிகழ்ச்சி முடிந்து பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறி சைக்கிளில் சென்றார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
தற்போது புதிய பிரதமராக ‛‛ டிக் ஷூப்'' பொறுப்பேற்றார். அவருக்கு நம் பிரதமர் மோடி ‛எக்ஸ்' தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.அதில் இந்திய- நெதர்லாந்து இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.