மருத்துவமனைக்காக மலை ஏறிய சிறுமி; 6 வயதில் அபார சாதனை
மருத்துவமனைக்காக மலை ஏறிய சிறுமி; 6 வயதில் அபார சாதனை
ADDED : செப் 09, 2024 12:12 PM

லண்டன்: மொரோக்காவில் உள்ள 13 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைச்சிகரம் மீது தந்தையுடன் சேர்ந்து ஏறி 6 வயது சிறுமி சாதனை படைத்து உள்ளார்.
மொரோக்காவில் உள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொபுக்கல் மலைச்சிகரம் வடக்கு ஆப்ரிக்காவின் உயரமான மலைச்சிகரமாக கருதப்படுகிறது. இது 13 ஆயிரம் அடி உயரம் கொண்டது. பிரிட்டனைச் சேர்ந்த செரன் பிரைஸ் என்ற 6 வயது சிறுமி, இதன் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். குழந்தையாக இருந்த போது, தன்னை காப்பாற்றிய மருத்துவமனைக்கு நிதி திரட்டுவற்காக இச்சாதனையில் ஈடுபட்டார். அவருக்கு துணையாக தந்தை கிளைனும் உடன் சென்றார். மற்றொரு மருத்துவமனைக்காக நிதி திரட்டுவதற்காக ஐரோப்பாவின் மிக உயரமான பிளான்க் மலைச்சிகரத்தில் ஏற இருவரும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பிளைன் கூறியதாவது: மொரோக்காவில் வெப்பநிலை தான் பெரிய சவாலாக இருந்தது. மலை மீது ஏறியதும் சூழ்நிலை மொத்தமாக மாறியது. எங்களின் முயற்சியை சமூக வலைதளத்தில் பின் தொடர்ந்தவர்கள் அனைவரும், பாராட்டு தெரிவித்தனர். இதற்காக ஒரு ஆண்டு கடும் முயற்சி செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.