நாங்களும் கில்லி தான்.. சொல்லி அடித்த இந்திய மகளிர் அணி
நாங்களும் கில்லி தான்.. சொல்லி அடித்த இந்திய மகளிர் அணி
ADDED : ஜூலை 10, 2025 03:05 AM

மான்செஸ்டர் : இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் அணி, 'டி -20' தொடரை வென்று அசத்தி உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் அணி, அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் மான்செஸ்டர் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த நான்காவது போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணியின் பேட்டர்கள், சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, டங்கிலி 22 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ராதா யாதவ், ஸ்ரீ சராணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா (32), சபாலி வர்மா (31) இணை அதிரடி துவக்கம் தந்தது. ஹர்மன்ப்ரீத் கவுர் (26) ஆறுதல் தந்தார். 17 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மீதம் இருக்கும் போதே தொடரை 3-1 என வென்றது.