sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் தம்பதி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

/

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் தம்பதி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் தம்பதி மரணத்தில் நீடிக்கும் மர்மம்

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் தம்பதி மரணத்தில் நீடிக்கும் மர்மம்


ADDED : மார் 01, 2025 10:19 PM

Google News

ADDED : மார் 01, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஆஸ்கர் விருது வென்ற 95 வயது ஹாலிவுட் நடிகர் ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா ஆகியோர் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது என்று கவுண்டி ஷெரீப் அடான் மெண்டோசா தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் தி பிரஞ்சு கனெக்ஷன்(1971) மற்றும் அன்பர்கிவன் (1992) ஆகிய படங்களில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றவர். இரண்டு முறை அகாடமி விருது வென்றவர்.

சூப்பர் மேன்(1978) மற்றும் சூப்பர்மேன் -2 படங்களில் லெக்ஸ் லுாதராக நடித்தற்காகவும், தி கான்வெர்சேஷன்(1974) ஹூசியர்ஸ்(1986) தி ராயல் டெனன்பாம்ஸ்(2001) மற்றும் எனிமி ஆப் தி ஸ்டேட்(1998) போன்ற படங்களில் நடித்தற்காகவும் அவர் ஹாலிவுடில் பரவலாக அறியப்பட்டார். அவர் கடைசியாக நடித்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியான வெல்கம் டு மூஸ்போர்ட்.

ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி பெட்சி அரகாவா ஆகியோர் உடல்கள் அவர்களது வீட்டில் இருந்து அழுகிய நிலையில் கண்டறியப்பட்டன.

இந்த மரணம் குறித்து சாண்டாபே கவுண்டி ஷெ ரிப் அடான் மெண்டோசா கூறியதாவது:

நடிகர் ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி பெட்சி அரகாவா ஆகியோரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவர்கள் இறந்திருக்கலாம்.

1991 முதல் திருமணமாகி தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்த இந்த ஜோடி, பிப்.26 அன்று பிற்பகல் பராமரிப்பு ஊழியர்களால் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களின் வீட்டின் தனி அறைகளில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவர்களின் நாய் ஒன்று அருகிலேயே இறந்து கிடந்தது. அவர்கள் பிப்.17ம் தேதி அன்று இறந்திருக்கலாம்.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

அவர்களது இறப்புக்கு வாயு கசிவு அல்லது பிற சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக இருந்ததற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை.

இறந்த பெண்ணின் அருகில் நாய் இருந்தது. அங்கிருந்து 15 அடி துாரத்தில் மற்றொரு நாய் இறந்து கிடந்தது. ஹீட்டர் நகர்ந்து இருந்தது. மாத்திரை பாட்டில் திறக்கப்பட்டு பெண்ணின் அருகில் மாத்திரைகள் சிதறி கிடந்தன. அவர் தனியறையில் வைக்கப்பட்டிருந்தார். வாயுக்கசிவுக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை.

சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் அடையாளம், டில்டியாசெம், டைலெனால் மற்றும் தைராய்டு மருந்துகள் இறப்புக்கு தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

இவ்வாறு அடான் மெண்டோசா கூறினார்.






      Dinamalar
      Follow us