வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை: டிரம்பிற்கு புத்திமதி சொல்கிறது சீனா!
வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை: டிரம்பிற்கு புத்திமதி சொல்கிறது சீனா!
UPDATED : ஜூலை 30, 2025 09:03 PM
ADDED : ஜூலை 30, 2025 09:02 PM

பீஜிங்: 'வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சீனா பதிலளித்துள்ளது.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு அதிக வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், 'இந்த நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் நடத்தும் கொலைகளை நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள், எல்லாம் நல்லதல்ல' என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை சீனா தொடர்ந்து தொடர்ந்தால், வரிகளை கணிசமாக உயர்த்தும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
நமது தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் சீனா எப்போதும் தனது எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யும். வரி விதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை.
வற்புறுத்தல் மற்றும் அழுத்தம் எதையும் சாதிக்காது. சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியாகப் பாதுகாக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.