கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை
கடுமையான பின்விளைவு ஏற்படும்: நாடு கடத்தும் படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை
UPDATED : ஜன 24, 2025 10:13 PM
ADDED : ஜன 24, 2025 10:04 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி துவங்கியது. இதுகுறித்த புகைப்படத்தை அந்நாடு வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுத்து நிறுத்துவோம். குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்து இருந்தார். இதன்படி அதிபராக அவர் பதவியேற்றதும்,'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது என அறிவித்தார். மெக்சிகோ எல்லையில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியை அதிகாரிகள் துவக்கினர். இதன்படி சட்டவிரோதமாக குடியேறிய 538 பேரை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் சிலர் பயங்கரவாதிகள், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


