நியூயார்க்கில் காட்டுத்தீயினால் கடும் புகை; அவசர நிலை பிரகடனம்
நியூயார்க்கில் காட்டுத்தீயினால் கடும் புகை; அவசர நிலை பிரகடனம்
ADDED : மார் 09, 2025 01:54 PM

நியூயார்க்: நியூயார்க்கின் லாங் தீவில் அடர்ந்த காட்டுத் தீ புகை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க் நகரத்தின் கிழக்கே உள்ள பைன் பேரன்ஸ் பகுதியில் லாங் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ புகை சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அம்மாநில கவர்னர் கேத்தி ஹோச்சுல் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
லாங் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து காரணமாக புரூக்ளின் முதல் லாங் தீவில் உள்ள மொன்டாக் பாயிண்ட் ஸ்டேட் பூங்கா வரை செல்லும் சன்ரைஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பற்றி எரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 29 பேர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.