நீச்சல் உடையில் மனைவி ஹாயாக செல்ல கணவர் வாங்கிய தீவு விலை ரூ. 418 கோடி
நீச்சல் உடையில் மனைவி ஹாயாக செல்ல கணவர் வாங்கிய தீவு விலை ரூ. 418 கோடி
UPDATED : செப் 28, 2024 11:10 AM
ADDED : செப் 28, 2024 10:57 AM

துபாய்: காதல் மனைவி யார் தொல்லையும் இல்லாமல் ஹாயாக, பிரீயாக , தொல்லை இல்லாமல் பீச்சில் வாக்கிங் செல்வதற்கென துபையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவிக்கு ரூ. 418 கோடி செலவில் தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.
அரபு நாடான துபாயை சேர்ந்தவர் ஜமால் அல் நடாக். இவர் பிரிட்டனை சேர்ந்த சவுதி ஜமால் 26 என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இவரை சந்தோசப்டுத்தும் விதமாக அன்பு பரிசு ஏதாவது வழங்க வேண்டும் என கணவர் ஜமால் முடிவு செய்தார். இதன் ஒரு விதமாக அருகில் ஒரு அழகான தீவை வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் ரூ. 418 கோடி.
இந்த தீவு வாங்கியது தொடர்பாக ஜமால் கூறுகையில் ; ' மனைவி சவுதி யார் தொந்தரவும் இல்லாமல் பீச்சில் நீச்சல் உடை அணிந்து சுதந்திரமாக வாக்கிங் செல்ல வேண்டும் ' இதற்காகவே இந்த தீவை வாங்கினேன் என்கிறார்.
மேலும் இந்த காதல் மனைவிக்கு பலவிதமான வைர, வைடூரியங்கள், தங்க நகைகள், ஆடம்பர சொகுசு கார், விலை உயர்ந்த காஸ்மெடிக் வகைகள் என தாராளமாக செலவழிக்கிறாராம். இதனை சவுதி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூவ்ஸ் அள்ளியது.
எனக்காக , எ ன் அன்பு கணவர் செய்துள்ள சிறந்த முதலீடு இது என்கிறார் மனைவி சவுதி.
நீங்கள் நீச்சல் உடை அணிய விரும்பினால், உங்கள் கோடீஸ்வர கணவர் உங்களுக்கு ஒரு தீவை வாங்கித் தருவார். என்றும் பொதுவாக குறிப்பிட்டுள்ளார்.