sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'

/

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'


ADDED : ஜூலை 30, 2011 11:58 PM

Google News

ADDED : ஜூலை 30, 2011 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட் : 'சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக, இதுவரை கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், மூன்றாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்' என, தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த நான்கு மாதங்களாக, கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் மீது, சிரியா ராணுவத்தினர் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கிளர்ச்சி தொடங்கிய, மார்ச் 15ம் தேதி முதல், ஆயுதம் இல்லாமல் கிளர்ச்சி செய்தவர்களில், 1,600 பேரை சிரியா ராணுவத்தினர் கொன்றுள்ளனர்.



இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள், தங்கள் இணையதளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, போராடி வரும் கிளர்ச்சியாளர்களை, ராணுவத்தினர் கடுமையான முறையில், கையாண்டு வருகின்றனர். அமைதியாகப் போராடுவோரைக் கூட, வீண்பழி சுமத்தி மிருகத்தனமாக நடத்துகின்றனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டும், அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என, கிளர்ச்சியாளர்கள் மாயமாகி வருகின்றனர். இவ்வாறு, இதுவரை 2 ஆயிரத்து 918 கிளர்ச்சியாளர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இவ்வாறு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us