இந்தாண்டின் சிறந்த மனிதர் டிரம்ப் : மீண்டும் தேர்வு செய்தது 'டைம்' இதழ்
இந்தாண்டின் சிறந்த மனிதர் டிரம்ப் : மீண்டும் தேர்வு செய்தது 'டைம்' இதழ்
ADDED : டிச 13, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டெனால்டு டிரம்ப்பை மீண்டும் 'டைம்' இதழ் தேர்வு செய்துள்ளது
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற 'டைம்' பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும்.
இதன்படி 2024ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில், அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்டு டிரம்ப் அதிக ஓட்டுக்கள் பெற்று முதலிடத்தை பிடித்து 'டைம் இதழில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபரானார். அப்போது டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் இடம் பெற்றார் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.