சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்தது; 6 பேர் பரிதாப பலி
சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்தது; 6 பேர் பரிதாப பலி
UPDATED : ஏப் 11, 2025 12:52 PM
ADDED : ஏப் 11, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹட்சன் நதி அமைந்துள்ளது. மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் உயிரிழப்பிற்கு நியூயார்க் நகர மேயர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இறந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் சுற்றுலா பயணிகள் அடங்குவர். தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு முயற்சி மேற்கொண்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.