ADDED : செப் 26, 2025 11:07 PM

வாஷிங்டன்:பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரை வெள்ளை மாளிகையில் உள்ள தன் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட உலகளாவிய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், அதிபர் டிரம்பை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இதற்கு டிரம்ப் வரவேற்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவுகள் பதற்றமாக உள்ள நிலையில், இச் சந்திப்பு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, ஷெரீப் மற்றும் முனீரை சிறந்த தலைவர்கள் என்று டிரம்ப் பாராட்டினார். அதுபோல் டிரம்பை மிகச் சிறந்த தலைவர் என ஷெரீப் பாராட்டினார்.