பிரிக்ஸ் அமைப்பு நொறுங்கி விட்டது; சொல்கிறார் டிரம்ப்
பிரிக்ஸ் அமைப்பு நொறுங்கி விட்டது; சொல்கிறார் டிரம்ப்
ADDED : பிப் 21, 2025 10:25 AM

வாஷிங்டன்: 'வரி அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: பிரிக்ஸ் அமைப்பினர் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் ஒரு புதிய கரன்சியை உருவாக்க விரும்பினர். நான் அதிபராக பதவியேற்ற பிறகு டாலரை அழிக்க முயற்சி செய்யும் நாடுகளுக்கும் 150 சதவீதம் வரி விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்தேன்.
இதனால் தற்போது பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது. வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு பற்றி எந்த தகவலும் வரவில்லை. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.